நயன்தாரா(Nayanthara), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நவம்பர் 18, 1984 அன்று கேரளா மாநிலம் திருவல்லா பகுதியில் பிறந்தார். நயன்தாராவின் தந்தை இந்திய விமான படையில் பணியாற்றியவர் என்பதால், பள்ளி படிப்பினை ஜாம்நகர், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படித்து முடித்தார். அதன் பின் கேரள மாநிலத்தில் உள்ள மார்தோமா என்ற கல்லூரியில் படித்து தனது இளங்கலை பட்டத்தினை வென்றார். நடிகை நயன்தாராவிற்கு லெனோ எனும் தம்பி உள்ளார், இவர் தற்போது துபாய் நாட்டில் வாழ்ந்து வருகிறார்.
கல்லூரி படிக்கும்போதில் மாடலிங் துறையில் ஈடுபட்ட நயன்தாரா, அங்கு கிடைத்த மலையாள திரைப்பட இயக்குனர் சத்யன் அந்திக்கப்-ன் அறிமுகத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.
2003-ம் ஆண்டு மனஸ்ஸின்னகர் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அடுத்ததடுத்து நடித்த திரைபடங்கள் வெற்றியடைய, தென்னிந்திய திரை உலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் பெயரினை நயன்தாரா பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நயன்தாராவுக்கு, கலைமாமணி விருது, நந்தி விருது, தமிழக அரசு திரைப்பட விருதுகள்,ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுள்ளன. ஆறு ஆண்டுகளாக காதலிச்சு வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை, ஜூன் 9 2022 அன்று நயன்தாரா திருமணம் செய்கிறார். இன்றும், தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.Read More
குட்டிப்புலி படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன் அதனைத் தொடர்ந்து, கும்கி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி விதிகளை மீறவில்லை என்று…
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் சட்ட விதிமுறைகள் தமிழக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகள் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை தேடும்…
நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலமாக குழந்தைகள் பெற்றுக்கொண்டது, மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு பற்றியும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியது பற்றின செய்தி.
, இந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய திசையை வழங்குவார்கள் என்றும் ஜோதிடர் கூறினார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் அண்மையில் சிறந்த நடிகை என தேசிய விருது பெற்றார். அவரது அம்மா மற்றும் அப்பாவும் விருது பெற்று…
நயன்தாரா நடிப்பில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியான படம் கொலையுதிர்காலம்.ஏற்கனவே தனி ஆளாக நின்று ‘அறம்’ படத்தை வெற்றி பெற வைத்த நயன்தாரா இதிலும் அதே போல…