தென்னிந்திய திரையுலகில் 1980 முதல் 1995-ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட நடிகை ராதிகா. (Actress Rathika)
இலங்கையில் கொழும்பு நகரில் 1963 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள்.
1978-ஆம் ஆண்டு தமிழில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் நல்ல வெற்றியை பெற, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றார்.
வெள்ளித்திரையில் இவரின் பிரபலத்தை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் தடத்தை பதித்தார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய ராதிகா, பல தமிழ் திரைப்படங்களையும், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிக்கின்றார். இவரின் நடிப்பு திறமையை பாராட்டி, இந்திய அரசு மற்றும் திரைத்துறை சார்ந்த இயங்கும் பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கியுள்ளது.
1999-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி தொடர் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது.சித்தி தொடரினை தொடர்ந்து இவர், அண்ணாமலை, செல்வி, அரசி என பல தொடர்களில் சன் தொலைக்காட்சியில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இதற்கிடையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் என்பவரை 2001 இல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு, ராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.
தொடர்ந்து, 2006 சட்டமன்றத் தேர்தல்க்கு முன்பாக அவர் தனது கணவருடன் ஆர். சரத்குமார் அதிமுகவில் இணைத்தார். ஆனால் அக்டோபர் 18, 2006ல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2007 முதல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொருளாளராக இருக்கிறார்.Read More
தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் தின விழாவில், திடீரென மேடை ஏறிய நடிகை ராதிகா சரத்குமார், இந்த விழாவில், கலைஞரின்…
Tamil Serial Update : 90-களின் இறுதியில் சின்னத்திரையில் களமிறங்கிய ராதிகா சித்தி வாணி ராணி உள்ளிட்ட பல தொடங்களில் நடித்து சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம்…
நடிகை ராதிகா சரத்குமார் ஃபாரின் டூரில் மாடர்ன் காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
போனிகபூர், வலிமை படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்துள்ளதால் அந்த நேரத்தில் லிஸி இந்த டின்னர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், வழக்கம் போல, இந்த டின்னர் நிகழ்ச்சியில்…
நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் நடிகை ராதிகா சரத்குமாரை சமீபத்தில் திருவான்மீயூர் கடற்கரையில் பார்த்ததாகவும் அப்பொது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசி சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாய் சேகர் படத்தின் ஹீரோ சதீஷை கலாய்த்து ராதிகா ஒரு ஜாலியான கேள்வி கேட்க, அதற்கு சதீஷ், ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத ஏன், நடிகை ராதிகாவே எதிர்பார்க்காத…