‘பவர் ஸ்டார்’ (Actor powerstar srinivasan) எனும் புனைப்பெயரில் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராக அறியப்படுகிறார். இவர் ஜனவரி 2013இல் நடிகர் சந்தானம் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் காமெடி காட்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
2012 இல் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளர் ஜி. யு. பாலசுப்பிரமணியனை மாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 2 வாரங்கள் சிறையில் இருந்து சீனிவாசன், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.தொடர்ந்து, 2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் 2010 முதல் 2014 வரை, மொத்தம் 12 படங்களில் சிறிய வேடங்களிலும், ஹிரோவாகவும், கெளரவுத் தோற்றத்திலும் நடித்துள்ளார். 2014 இல் வெளியான கோலி சோடா படத்திற்கு பிறகு, அவரை திரையில் காணமுடியவில்லை. Read More
Tamil News Update : நடிகை வனிதா விஜயகுமாருடன் பிக்கப், ட்ராப் என்ற படத்தில், மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பவர்ஸ்டார் இந்த இப்படத்தில்…
பிக்கப் டிராப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக நடிக்கும் வனிதாவுக்கு இந்த படத்தில் வைரல் ஸ்டார் என்று பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை யார் கொடுத்தது…
Vanitha vijaykumar and power star srinivasan viral marriage photo, lakshmi ramakrishnan comments: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் வைரல்…
வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் இந்த கல்யாணம் உண்மைதானா என்று நம்ப…
Power Star Seenivasan In Hospital : தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.