இந்தியத் திரைப்பட நடிகை சமந்தா ருத் பிரபு (Actress Samantha), தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஏப்ரல் 28, 1987 அன்று மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர், சென்னையில் தான் வளர்ந்தார். இவரது இயற்பெயர் யசோதா. சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்.
ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மக்களிடையே நல்ல வரவேற்பை வெற்றி பெற்றது.
பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் சமந்தா தோன்றினார்.
திறமையான நடிப்பு காரணமாக, CineMAA விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், நந்தி விருது, டிஎஸ்ஆர் தொலைக்காட்சி திரைப்பட விருது, விஜய் விருதுகள் போன்றவற்றை பெற்றுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது
ஆனால், 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.
திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறியுள்ள சமந்தா, மீண்டும் தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.Read More
நடிகை சமந்தா விவாகரத்திற்குப் பிறகு, ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸிலேயே வசித்துவந்த நிலையில், தற்போது அவர் ஹைதராபாத்தில் 13-வது தளத்தில் புதிய வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Yashoda movie review: ஒரு சாதாரண படமாக தொடங்கினாலும், காட்சிகள் செல்ல செல்ல விறுவிறுப்பின் வேகம் அதிகரித்து, மர்மங்கள் நிறைந்த இடைவேளை வரும்போது இது ஒரு “சாதாரண…
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில், நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் கூறியதால்…
நம்முடைய சினிமா உலகில் நயன்தாராவும் சமந்தாவும் பெண்களின் தீவிர அடையாளங்கள். ஒரு ஆணின் காதலைப் பெறுவதற்காக ‘டு டுட்டூ டூ’ பாடலுக்கு போட்டி போட்டுக்கொண்டு நடனமாடுவதைப் பார்க்கும்போது…