இந்திய திரைப்பட இயக்குனரும், பரதநாட்டிய நடனரும், பின்னணி பாடகியுமான ஐஸ்வர்யா (Aishwarya Dhanush), நடிகர் ரஜினி காந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும் ஆவார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இவருடைய தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைப்பட வடிவமைப்பாளராகவும், இயக்குனராகவும் உள்ளார். ஐஸ்வர்யா தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினை தன் நடனத்திற்காக பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் சீசன் 3இல் ஜீவா, சங்கீதா, ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார். 2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாட்டு பாடி, பின்னணி பாடகியானார்.
இதையடுத்து,2010இல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் பாடியிருந்தார்.
இறுதியாக, தனது கணவர் தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாமில் அறிமுகமானார். பின்னர், 2015 இல் வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார்.
குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக சினிமா பயணத்திற்கு இடைவேளி விட்ட ஐஸ்வர்யா, சுமார் 18 ஆண்டு திருமண பந்தத்தை முறித்துகொள்வதாக இந்தாண்டு ஜனவரியில் அறிவித்தார். தனுஷ், ஐஸ்வர்யா ஒரே நாளில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் விவகாரத்து முடிவை அறிவித்தனர்.
தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா, உடல் நலத்தில் அதீத அக்கறை காட்டி வருகிறார். அவ்வப்போது, தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் காணொலிகளை சமூக வலைதளத்தில் அப்லோடு செய்து வருகிறார்.Read More
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், தற்போது தனது வீட்டில் 200…
விவாகரத்து குறித்த அறிவிப்பிற்கு பிறகு தன்னை மற்ற விஷயங்களில் மிகவும் பிசியாக ஐஸ்வர்யா வைத்துக் கொண்டு வருகிறார். அவரது சண்டே உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது.
பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா சமீபத்தில் ’முசாஃபிர்’ என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார்.
பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா சமீபத்தில் ’முசாஃபிர்’ என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார்.
தம்பதியருக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக மீண்டும் பெற்றோர்களாக இணைய முடிவு செய்துள்ளனர்.
ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் ஒரு மியூசிக் வீடியோவை இயக்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் மேடையில் ரொமான்ஸ் பாடல் பாட, ஐஸ்வர்யா வெட்கத்தில் சிரிக்கும் பழைய வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டு…
நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.