12 அக்டோபர் 1991இல் பிறந்த அக்ஷரா ஹாசன் (Akshara Haasan), திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் உலக நாயகன் பத்மஸ்ரீ கமல் ஹாசனின் மகளும், நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையும் ஆவார். இவர் ஹிந்தியில் வெளியான ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலமே திரைத்துறைக்கு அறிமுகமானார்.
சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் அக்சரா ஹாசன். இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றார்.
இவருடைய தாயும், தந்தையும் பிரிய நேரிட்டதால், தனது தாயாருடன் மும்பையில் வசிக்க நேரிட்டது. இவரது சகோதரியான ஸ்ருதி ஹாசன் தந்தையுடன் சென்னையில் தங்கினார்.
2015 ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். தொடர்ந்து, தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்திலும், 2019 ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்திலும், ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில், சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர், தந்தை இயக்கி வந்த சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார். ஆனால் அப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 2019 ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ5 என்ற இணைய செயலி யில் Fingertip என்ற இணையதள நாடக தொடரிலும் நடித்தார்.
சகோதரியுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவில் திரைத்துறையில் தென்பட்டுள்ள அக்ஷரா ஹாசன் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.Read More
Kadaram Kondan Movie Review and Rating In Tamil: இன்னும் நிறைய ஸ்கிரீன் ஸ்பேசும், வசனங்களும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், ரசிகர்களுக்கு திருப்தியையும், முழுமையும் கொடுத்திருக்கும்.
அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோாி நடிகை அக்ஷரா ஹாசன் மும்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். நடிகர் கமல் ஹாசன் இளைய…