சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா (Alya Manasa), விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.
ஆல்யா தனது 17 வயதில் மாடலாக கலைப்பயணத்தை தொடங்கினார். பின்னர், நடன பயிற்றுவிப்பாளராக இருந்த ஆல்யா, அவ்வப்போது டான்ஸ் வீடியோஸை சமூக வலைதளத்தில் அப்லோடு செய்து வந்தார். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பே, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆல்யா பங்கேற்றுள்ளார். அப்போது, நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா காதலித்து வந்தார். ஆனால், ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கி சில மாதங்களில் இவர்களது காதல் முறிவடைந்தது. இதையடுத்து, “ராஜா ராணி” தொடரில் நாயகனாக நடித்துள்ள சஞ்சீவ் என்பவரை காதலித்து ஆல்யா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில், 2017ஆம் ஆண்டு இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் வெளிவந்த ஜூலியும் 4 பேரும் படத்தில் ஆல்யா நடித்திருந்தார். தொடர்ந்து 2018ல் ராஜா ராணி புகழ் சஞ்சீவுடன் என்னை மாற்றும் காதலே என்ற குறும்படத்திலும் நடித்தார். தனித்துவமான நடிப்பிற்காக behindwoods விருது, விஜய் டிவி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை ஆலியா பெற்றுள்ளார்.
ராஜா ராணி சீரியல் ஹீட் அடிக்க, வேறொரு கதாநாயகனுடன் ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா நடித்து வந்தார். கர்ப்பமான பிறகும் சீரியலில் நடித்து வந்த ஆல்யா, பிரசவ நேரத்தில் சீரியலில் இருந்து விலகினார். ஆல்யாவுக்கு 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது சீரியலுக்கு இடைவெளிவிட்டுள்ள ஆல்யா, யூடியூப் சேனலில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஆல்யா, யூடியூப் ஸ்டாராக மாறியுள்ளார்.Read More
Alya Manasa Sanjeiv Viral Youtube Video 1Million Views அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்த்த ஆல்யா, அய்லாவை ஓட்டப்பந்தயத்தில் சேர்த்து விடவேண்டும் என ஓர்…
Alya manasa conforms her pregnancy Tamil News: இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யா மானசா தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.