பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் (Dr Anbumani Ramadoss), சரசுவதி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 1968-ம் ஆண்டுஅக்டோபர் 9-ம் தேதி புதுச்சேரியில் பிறந்தார் அன்புமணி. இவரின் மனைவி சௌமியா. இவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.
1984-ம் ஆண்டு சேலம் ஏற்காட்டிலுள்ள மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த அன்புமணி, 1986-ம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பை முடித்தார். 1992-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்தார். 2003-ம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics (L.S.E.)) பெருநிலைப் பொருளாதாரம் (Introductory MacroEconomics) எனும் படிப்பையும் முடித்தார்.
மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் மருத்துவராக ஒன்றரை ஆண்டுகாலம் பணி புரிந்தார்.
1995-ம் ஆண்டு தனது தந்தை ஆரம்பித்த “பசுமைத்தாயகம்” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார் அன்புமணி. பின்னர், 2006-ம் ஆண்டு பா.ம.க-வின் இளைஞரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004-ம் ஆண்டு தி.மு.க – பா.ம.க கூட்டணி ஒப்பந்தப்படி வழங்கப்பட்ட மாநிலங்களவை சீட்டில் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்
2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார். இருப்பினும் அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி ஒப்பந்தப்படி மாநிலங்களவை சீட் கிடைக்கப்பெற்று மாநிலங்களவை உறுப்பினராக நீடித்தார்.
இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவையை இந்தியாவிற்கு கொண்டுவந்தார். புகையிலை எதிர்ப்பு நடவடிக்கை, போலியோ ஒழிப்பு செயல்பாடுகள் போன்றவற்றுக்காக எல்.டெர்ரி விருது உள்பட உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்Read More
“அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுப்புட்டிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியோ செலுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன” – அன்புமணி ராமதாஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது, சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது – முதல்வரைச் சந்தித்தப் பின் அன்புமணி ராமதாஸ்…
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்புகளை ஆராய்வது பற்றிய பேச்சுக்கள் வெளிவரும் நிலையில், அ.தி.மு.க பிளவுபட்டுள்ளது என்ற அன்புமணி ராமதாஸ் கருத்துக்களால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தலைவர்கள் கொந்தளிக்கின்றனர்.
அ.தி.மு.க 4ஆக உடைந்துள்ளது. இரண்டாவது மிகப்பெரிய கட்சி நாங்கதான் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு, கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி…