Anbumani Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் (Dr Anbumani Ramadoss), சரசுவதி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 1968-ம் ஆண்டுஅக்டோபர் 9-ம் தேதி புதுச்சேரியில் பிறந்தார் அன்புமணி. இவரின் மனைவி சௌமியா. இவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.


1984-ம் ஆண்டு சேலம் ஏற்காட்டிலுள்ள மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த அன்புமணி, 1986-ம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பை முடித்தார். 1992-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்தார். 2003-ம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics (L.S.E.)) பெருநிலைப் பொருளாதாரம் (Introductory MacroEconomics) எனும் படிப்பையும் முடித்தார்.

மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் மருத்துவராக ஒன்றரை ஆண்டுகாலம் பணி புரிந்தார்.

1995-ம் ஆண்டு தனது தந்தை ஆரம்பித்த “பசுமைத்தாயகம்” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார் அன்புமணி. பின்னர், 2006-ம் ஆண்டு பா.ம.க-வின் இளைஞரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2004-ம் ஆண்டு தி.மு.க – பா.ம.க கூட்டணி ஒப்பந்தப்படி வழங்கப்பட்ட மாநிலங்களவை சீட்டில் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்


2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார். இருப்பினும் அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி ஒப்பந்தப்படி மாநிலங்களவை சீட் கிடைக்கப்பெற்று மாநிலங்களவை உறுப்பினராக நீடித்தார்.

இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவையை இந்தியாவிற்கு கொண்டுவந்தார். புகையிலை எதிர்ப்பு நடவடிக்கை, போலியோ ஒழிப்பு செயல்பாடுகள் போன்றவற்றுக்காக எல்.டெர்ரி விருது உள்பட உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்
Read More

Anbumani Ramadoss News

anbumani ramadoss
பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ் டுவீட்

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் என்.எல்.சி-க்கு நில ஆர்ஜிதமா? தங்கம் தென்னரசு கருத்துக்கு அன்புமணி ராமதாஸ் பதில்

“நேற்று கொண்ட கொள்கைக்கு எதிராக ஏன் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” – அன்புமணி ராமதாஸ்

கடலூரில் பா.ம.க பந்த்: அதிகாலையில் பேருந்து கண்ணாடி உடைப்பு.. பரபரப்பு

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கோட்டையில் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி: வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி முக்கிய கோரிக்கை

வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது, சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது – முதல்வரைச் சந்தித்தப் பின் அன்புமணி ராமதாஸ்…

ஈரோடு கிழக்கில் பா.ம.க போட்டி இல்லை; யாருக்கும் ஆதரவு கிடையாது: அன்புமணி அறிவிப்பு

எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

26 கிராமங்களில் 12000 ஏக்கர் நிலத்தை பறிக்க என்.எல்.சி முயற்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

என்.எல்.சி-க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் நடை பயணம்: தொண்டர்கள் திரளாக பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

வார்த்தைப் போர்; தேர்தல் கூட்டணியை பாதிக்காது – அ.தி.மு.க, பா.ம.க தலைவர்கள் கருத்து

பா.ம.க தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்புகளை ஆராய்வது பற்றிய பேச்சுக்கள் வெளிவரும் நிலையில், அ.தி.மு.க பிளவுபட்டுள்ளது என்ற அன்புமணி ராமதாஸ் கருத்துக்களால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தலைவர்கள் கொந்தளிக்கின்றனர்.

அன்புமணி ராமதாஸ் நன்றி மறந்து பேசினால் பா.ம.க தொண்டர்களே மதிக்க மாட்டார்கள்: ஜெயக்குமார்

அ.தி.மு.க 4ஆக உடைந்துள்ளது. இரண்டாவது மிகப்பெரிய கட்சி நாங்கதான் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு, கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி…

அ.தி.மு.க 4-ஆக உடைந்தது… தி.மு.க-வுக்கு பலமான விமர்சனம்… வேகமாக முன்னேறுகிறது பா.ம.க – அன்புமணி

பா.ம.க புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டட்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “அ.தி.மு.க 4-ஆக உடைந்துள்ளது; தி.மு.க-வுக்கு பலமான விமர்சனங்கள் வருகிறது; பா.ம.க வேகமாக முன்னேறுகிறது”…

தெற்கு ரயில்வேயின் 964 பணிகளில் 80% வட இந்தியர்கள் தேர்வு; அன்புமணி அதிர்ச்சி

தெற்கு ரயில்வேயின் 964 பணியிடங்களில் 80% வட இந்தியர்கள் தேர்வு; தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது…

நம் முன்னோர்கள் சோழ மன்னர்கள்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

அரியலூர் சோழ பாசன திட்டம், புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே சோழர் காலத்தில், சோழ மன்னர்கள் நடைமுறைப்படுத்திய திட்டம்.

டாஸ்மாக் கடைக்கு இலக்கு நிர்ணயம் வெட்கக்கேடானது : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

மன்னர்கள் உருவாக்கியது தான் ஏரிகளா? அதன் பிறகு ஏரிகளை உருவாக்க கூடாதா? விவசாயத்தில் லாபம் இல்லாததால் அதை மனைகளாக விற்கும் நிலை இருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை – அன்புமணி ராமதாஸ்

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம், அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை, சட்டமன்றத்தில் எடுபடாது – கோவையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

என்.எல்.சி-யை மூடுவோம்; ராணுவம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு

தேர்தலுக்கு முன்பு நிலம் எடுக்க விடமாட்டோம் என்கிறார்கள். தேர்தலுக்கு பின்பு நிலம் எடுக்க அனுமதிக்கின்றனர். இது ஆர்ப்பாட்டம்தான், அடுத்து மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என…

சின்ன சேலத்தில் 144 தடை உத்தரவு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தலைவர்கள் கோரிக்கை

சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

பாமக பொருளாளர் எழுத்தாளர் திலகபாமா நேர்காணல்: அதிமுக அழிவை நோக்கிச் செல்கிறது!

“என்னைப் பொறுத்தவரைக்கும் அதிமுக அழிவை நோக்கி செல்கிறது. எப்போது ஒருவர் தன் முனைப்பாக கட்சியில் செயல்படத் தொடங்குகிறார்களோ, அப்போதே கட்சி அழிவை நோக்கி நகர்ந்துவிடும். அதுதான் இப்போது…

தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.க-தான்: அன்புமணி ராமதாஸ்

அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளும் ஒன்றுதான். தலைவர்கள்தான் வேறுவேறாக உள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பா.ம.க சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைத்தெறிவோம் – அன்புமணி ராமதாஸ்

எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் பாமகவுக்கு சாதிக்கட்சி என்ற பெயர் இருப்பதாகவும், அந்த மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.