தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் தொட்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி – பரமேஸ்வர் தம்பதிக்கு பிறந்தவர் அண்ணாமலை (Annamalai). கோவையில் என்ஜினீயரிங் படித்த அவர், இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து, கர்நாடகாவின் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியமர்ந்தார். போதை பொருள் விற்பனை செய்பவரை பிடித்தல், இரவு பைக்கில் ரோந்து பணி என அதிரடி நடவடிக்கைகளால் அவரை அம்மாநில மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தாக கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2018ஆம் ஆண்டு அண்ணாமலை டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2019இல் மக்கள் பணியாற்ற காவல் துறை பணியிலிருந்து விலகினார்.
ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை உருவாக்கி, சமூக பணிகளையும், இயற்கை விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.
பின்னர் 2020 இல், தமிழக மாநில பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பாஜகவின் விசுவாசியாக பல அறிக்கைகளையும் அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக சென்றதையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலை கைவசம் வந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். Read More
அண்ணாமலையின் நிலைப்பாடு தமிழகத்தில் பல பா.ஜ.க தலைவர்கள் இடையே மனக்கசப்பை எழுப்பியுள்ளது. அவர்களில் சிலர், ‘முழு கட்சியையும், அனைத்து அரசியல்வாதிகளையும் இழிவுபடுத்தும் வகையில், மாநில பா.ஜ.க தலைவராக…
என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்திப்பதுப் பற்றி இனி வரும் காலங்களில் ஆக்ரோஷமாகவும் பேச உள்ளேன் – தமிழக பா.ஜ.க தலைவர்…
அ.தி.மு.க உடனான உறவை 2024 தேர்தலுக்கு முறித்துக் கொள்ள வேண்டும் அல்லது தலைவர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று அண்ணாமலை அழைப்பு; கூட்டணியை கைவிடுவதற்கான சாத்தியக்கூறுகள்…
பல பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு மாறியதைத் தொடர்ந்து, கூட்டணியின் பெரிய திராவிட கட்சியை அண்ணாமலை விமர்சித்த நிலையிலும், காவி கட்சியினர் இ.பி.எஸ் படங்களை எரித்தனர்
பா.ஜ.க ஐ.டி. விங் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வுக்கு தாவியது குறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, குருசேத்திர போர் தொடங்கிவிட்டது…
பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க-வினர் இ.பி.எஸ் உருவபொம்மை எரித்து கண்டனம் தெரிவித்த நிலையில், மதுரையில் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க-வில்…
ஏதோ ஒரு கார்னரில் அரசியல் செய்து கொண்டு உள்ளார் திருமாவளவன். திருமாவளவனை வெளியேற்றுவதற்கு தி.மு.க தயாராகிவிட்டது என்று எண்ணுகிறேன். அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தான் அவர்…
அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உள்பட 3 ஆயிரம் பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு தொடர்பாகவும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் சென்று ஆளுநரிடம் பா.ஜ.க தலைவர்…
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்குமான பிணைப்பு மேலும் இறுக்கமாக போகிறது. நிச்சயமாக தளர்வடையாது – இலங்கை யாழ்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உறுதி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரதான், மாண்டவியா மற்றும் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்களில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தி.மு.க ஒரு தீய சக்தி என்று அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தி.மு.க-வை வீழ்த்த…