ஜெகன் மோகன் ரெட்டி(jagan mohan reddy), ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவந்தலா பகுதியில் டிசம்பர் 21, 1972 அன்று பிறந்தார். இவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார்.
இவரது தாய் விஜயலட்சுமி புலிவந்தலா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவர். இவருக்கு சர்மிளா என்னும் தங்கை உள்ளார். ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பின்னர், நிசாம் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றார்.
புலிவென்டுலா-ஐ சேர்ந்த குழந்தைமருத்துவர் மற்றும் கொடையாளருமான டாக்டர் ஈ.சி. கெங்கி ரெட்டியின் மகள் பாரதியை 28 ஆகஸ்ட் 1996 அன்று மணமுடித்துக்கொண்டார் ஜெகன்மோகன். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
2004 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
2009இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடப்பாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அடுத்த ஆண்டே, 15வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பின்னர், தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் என்னும் கட்சியை 2011 இல் தொடங்கினார்
2011 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், 2012இல் சொத்து குவிப்பு புகாரில் நடுவண் புலனாய்வுச் செயலகம் சோதனைக்கு உள்ளானார். அப்போது, 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2014இல் ஆந்திர சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். தனது கட்சி தெலுங்கு தேச கட்சியிடம் தோல்வியை சந்தித்தாலும், எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் பதவியேற்றார்.Read More
ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் 14 சதவிகிதம் அதிகமாகப் பங்களிக்கத் தயாராக இருந்தால், அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 40 சதவிகிதம் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறலாம்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
கடந்த ஆண்டு முதல், ஒய்.எஸ்.சர்மிளா தனது கட்சியை நிறுவுவதற்காக தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்துகிறார். கே.சி.ஆர் தலைமையிலான கட்சி அவரைப் புறக்கணித்தது ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானாவில், ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ், பாஜக அதை எதிர் நிலைப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற அச்சத்தில், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையைப்…
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தென் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் மூவரும் அடுத்தடுத்து தலைநகர் டெல்லி சென்றது தேசிய…
ஓய். எஸ். ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் விஜய்சாய் ரெட்டி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் இருக்கும் படங்களை ட்வீட் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்
புதிய சட்டத்தின்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டி னத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் எரிபொருள் மிச்சமாகுவது மட்டுமின்றி தங்கள் அமைச்சகங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
660 ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களிலும் மற்றும் 10,047 மண்டல் பரிஷத் பிராந்திய தொகுதிகளில் 8,500 இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றுள்ளது.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள நிகழ்வு…