மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு 1968 ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பிறந்தவர் கனிமொழி(kanimozhi). பள்ளிப் படிப்பை சென்னை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் பயின்றார். 1989 ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். ஆனால், மணவாழ்க்கை முறிவை நோக்கி சென்றதால், ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆதித்யா என்ற ஒரு மகன் உள்ளார்.
சங்க இலக்கியங்களில் மீதான ஆர்வத்தால், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.
தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராகவும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
2007 ஜூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட கனிமொழி, 2009 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் பொதுச் சபை உறுப்பினராகவும் 2012இல் பணியாற்றினார். இரண்டாவது முறையாக 2013இல் மீண்டும் மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு, எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான தேர்வுகுழுவால், சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.Read More
‘நீ சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வச்ச ஆம்பளையா இருந்தால், வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தால்…’ என்று மு.க. ஸ்டாலினைத் தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்டாலின்…
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால், மத்திய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சி.ஜி.எல் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்புக்கு தி.மு.க எம்.பி…
தி.மு.க-வில் முக்கிய தலைவராக சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் பச்சைக்கொடி…
கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு மேடையை…
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் குறித்து மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
திமுக ஆட்சியில் இளம் விதவைகள் கம்மி ஆகிட்டாங்களா என்ற கேள்விக்கு கனிமொழியும் ஜோதிமணியும் பதிலளிக்காமல் தெறித்து ஓட்டம் எடுத்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து ட்விட்டரில் வைரலாக்கி…
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியேற்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி திமுகவினர் இடையே நெகிழ்ச்சியாக பேசப்படுகிறது. கலைஞரின் முரட்டு பக்தர் வழங்கிய 111 சவரன் சங்கிலியை அவருடைய மகனுக்கே…
அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் சென்று அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக எம்.பி கனிமொழியை புகழ்ந்து பேசிய செய்தி வெளியான நிலையில்,…