நடிகை குஷ்பு(Kushboo) அரசியல்வாதியும், தென்னிந்திய திரையுலகில் முக்கியமான நடிகையும் ஆவார். இவர் செப்டம்பர் 29, 1970 அன்று மகாராஷ்டிராவில் பிறந்தார்.
1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். பின்னர், படங்களில் சிறப்பு தோற்றங்களிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை 2000 ஆம் ஆண்டில் மணந்தார். இந்த தம்பதிக்கு, அவந்திகா
ஆனந்திதா என 2 குழந்தைகள் உள்ளன.
தற்போது, தனது கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்
தமிழ், கன்னடம், மலையாளம் என 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
பெரியார் மீது இருந்த பற்றால் 2010ல் திமுகவில் இணைந்தார். பின்னர், 2014ல் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார். 2021ல் பாஜக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக குஷ்பு பதவி வகிக்கிறார்.Read More
கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகை குஷ்பு, அந்த கோவிலை தனது தாயாரின் மாமனார் கட்டியது என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில்…
தமிழ் சினிமாவின் காமெடி இயக்குனர் சுந்தர்.சி-யை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை குஷ்புக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு தி.மு.க நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ‘இதுபோன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்களை மூடிக்…
உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை குஷ்பூ, விதவிதமான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். குஷ்பூவை ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி…
Gokulathil Seethai tamil news: ‘கோகுலத்தில் சீதை’ சீரியல் திடீர் நிறுத்தத்திற்கு நடிகை குஷ்பூ ஒரு காரணமாக இருக்கலாம் என சிலர் குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது…
கலர்ஸ் தமிழ் டிவியின் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ள நடிகை குஷ்பு, இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் என்…