இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது.
லாஸ்லியா( losliya) இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார்.
2015 முதல் 2019 வரை, சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களிடம் வரவேற்பை பெற்றார்.
பின்னர், 2020 இல் ஹர்பஜன் சிங், அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக நடித்த இரண்டாவது படம் கூகுள் குட்டப்பன் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர, லாஸ்லியா நடிகர் அஸ்வினுடன் sugar baby என்ற ஆல்பம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவர் ஏற்கனவே அஸ்வினுடன் ‘ப்ளேஸ்ஸோ’ என்ற சோப்பு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.Read More