தாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உற்சாகமடைந்த நெல்லை வாசிகள் தாமிரபரணியின் பாய்ச்சலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து மதத்துக்கு திமுக செய்த பல்வேறு பணிகள் குறித்து பட்டியலிட்டதோடு, இது பற்றியெல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்ற சிலருக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விவி மினரல்ஸ் நிறுவனரும் தொழிலதிபருமான வைகுண்டராஜன், தன்னை கூலிப்படையினர் கண்காணித்து கடத்தி கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.பி.வி.பி-யினரின் எதிர்ப்பை தொடர்ந்து, எழுத்தாளர் அருந்ததிராயின் Walking with the Comrades என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கிய பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பாளையம்கோட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நபரை தீயணைப்பு படை வீரர்கள் விரைவாக செயல்பட்டு நொடியில் கப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Chennai - Nanguneri cycle journey : ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலையும் முடித்துக் கொண்டவர் தனது சொந்த வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.
பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு வயது 78.
இஸ்லாமிய அமைப்புகளையும் கொரோனா வைரஸ் தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பேசியதாக பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்துவரும் மாரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீங்கள் அவரிடம் ஏதாவது கேள்வியை கேட்க விரும்பினால் இந்த செய்தியின் கீழ்வரும் கமெண்ட் பகுதியில் பதிவிடலாம்.