நடிகை வனிதா விஜயகுமார்(Actress Vanitha vijayakumar), தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.
1995-ஆம் ஆண்டு “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
வனிதா பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் ஆவார். வனிதாவுக்கு இரண்டு தங்கையும், ஒரு தமையனும் உள்ளனர். தங்கையான ஸ்ரீதேவி,ப்ரீத்தா தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளனர். இவரது தம்பி அருண்விஜய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். பின்னர் அதே ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா என்னும் நாடக தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், நடுவராகவும் பணியாற்றி உள்ளார்.
திரைப்பட துணை கதாபாத்திர நடிகர் ஆகாஷ் என்பவரை 2000-ஆம் ஆண்டில் வனிதா திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுது பிரிவிற்கு பின்னர் அந்த குழந்தை நடிகர் விஜயகுமார் ஆதரவில் வளர்ந்து வருகிறது.
தொடர்ந்து, 2007 இல் நடிகை வனிதா, தொழிலதிபர் ஆனந்த ஜெய் ராஜனை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்த திருமணத்தையும் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டனர்.
இறுதியாக வனிதா 2020-ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தினம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகி 4 மாதம் ஆவதற்குள், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட, பீட்டர் பாலைப் பிரிவிதாக வனிதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வனிதா கடைசியாக 2015இல் வெளியான எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளராக பணியாற்றினார். Read More
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் வனிதாவுக்கு போன் செய்தது உண்மைதான் இரண்டுமுறை இந்நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் என்பதால் அவரிடம் நிகழ்ச்சி குறித்து பேசினேன்.
சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அமுதாவும் அன்னலக்ஷ்மியும், மாரி மற்றும் மீனாக்ஷி பொண்ணுக ஆகிய மூன்று தொடர்கள் ஒளிபரப்புவது பற்றிய அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஊடக சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது.
Tamil Serial Update : யார் சொல்வதையும் கேட்காத அந்த பெண் வலுக்கட்டாயமாக வந்து வனிதா மற்றும் அவரது மகளின் கேரக்டர் குறித்து தரக்குறைவான கருத்துக்களை கூறியுள்ளார்
Tamil Serial Update : ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்த விஜயகுமார் பாட்ஷா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்-க்கு பதில் அளித்த வனிதா விஜய்குமார், பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், தமிழ் நடிகர்களின் நிலை பற்றியும் பேசினார். இதோ அந்த வீடியோ!