இந்திய திரைப்பட நடிகை அமலா பால் (Amala Paul), 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தது மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, அமலா நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் பிரபலமானவர்.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுளத்தில் பிறந்தார் அமலா பால். நிர்மலா மேல்நிலை பள்ளியில் கல்வி கற்ற இவர், கொச்சினில் உள்ள ஸ்ட.தெரசா கல்லூரியில் ஆங்கிலம் சார்ந்த பட்ட படிப்பினை கற்றுள்ளார்.
கல்லூரி காலங்களிலே மேடை நாடகத்தில் ஆர்வம் காட்டிய அமலா, மாடலிங் பணியில் ஈடுபட்டார். பின்னர், 2009 இல் நீலதம்ரா என்கிற மலையாள படத்திலும், 2010-ம் ஆண்டு நடித்த வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது மைனா படம் . இத்திரைப்படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருதினை பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வளம் வர தொடங்கினார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என ரவுண்ட் அடிக்கும் அமலா பால், எடிசன் விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்,எம். ஜி. ஆர். – சிவாஜி விருதுகள், விஜய் விருதுகள், ஜெயா விருதுகள் என பலவற்றை பெற்றுள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து வந்த அமலா பால், ஜூன் 12, 2014-ல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2017இல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
பின்னர், 2020-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி நடிகை அமலா பால் தனது நண்பரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். அவர் தொழிலதிபர் ஆவார்.
கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். அனுமதி மறுக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு ஆண்டிலும் மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது – அமலா பால்
அமலா பால் கையில் மது பாட்டில் உடன் கலக்கலாக டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், என்ன அமலா பால் இப்படி இறங்கிட்டாங்க என்று கம்மெண்ட்…
சர்ச்சைகளுடன் சகஜமாக வலம் வரும் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை கவிதை வரிகளுடன் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் அவருடைய புதிய டுவிட்டர் பதிவில் தனது 2-ம் திருமணம் பற்றி சூசகமாக பேசுவதாக நெட்டிசன்கள் விவாதித்து…
தலைவா படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் விஜய் மேல் காதல் வயப்பட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்ட அமலாபால், குறுகிய காலத்திற்குள்ளேயே மனக்கசப்பு அடைந்து…
இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘ஆடை’ படம் ஜூலை 19 திரையரங்குகளில் ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அமலாபால் துணிச்சலாக சில…
சுசிலீக் மூலம் பிரபலமான சுசித்ரா, அன்புள்ள மான்விழியே பாடல் மூலம் சூப்பர் ரீ எண்ட்ரியாகியுள்ளார். இந்த ஆல்பம் மூலம் அவர் முந்தைய பிரச்னைகளில் இருந்து விடுபட்டிருப்பதாக தெரிகிறது.