ஜி.வி.பிரகாஷ் குமார் (GV prakash ), தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். ஜூன் 13, 1987 அன்று சென்னையில் பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் – ஏ.ஆர்.ரெய்கானா தம்பதிக்கு பிறந்தார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்கா மகன் ஆவார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதல் பாடலை பாடி திரைப்பாடல் அனுபவத்தை பெற்றுள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்-யின் அந்நியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்களில் இசையமைப்பாளரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து, இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து பொல்லாதவன், காளை, குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
பல பாடல்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடி திரையுலகில் அணைத்து தரப்பிலும் அறியப்பட்டார்.
2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார்.
2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது, பல திரைபடங்களுக்கு இசையமைத்தும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.Read More
இசையமைப்பாளர் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவி தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு ரொமாண்டிக் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததால் அந்தப்படம் வைரலாகி…
தமிழ்நாட்டில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ், 7 வயதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாடிய பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பிரபலமான…