GV Prakash

ஜி.வி.பிரகாஷ் குமார் (GV prakash ), தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். ஜூன் 13, 1987 அன்று சென்னையில் பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் – ஏ.ஆர்.ரெய்கானா தம்பதிக்கு பிறந்தார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்கா மகன் ஆவார்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதல் பாடலை பாடி திரைப்பாடல் அனுபவத்தை பெற்றுள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்-யின் அந்நியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்களில் இசையமைப்பாளரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து, இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து பொல்லாதவன், காளை, குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

பல பாடல்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடி திரையுலகில் அணைத்து தரப்பிலும் அறியப்பட்டார்.

2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார்.

2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது, பல திரைபடங்களுக்கு இசையமைத்தும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
Read More

GV Prakash News

முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக இந்த நிலைக்கு வரவில்லை: புகழாரம் சூட்டிய ஜி.வி.பிரகாஷ்

கோவையில் நடைபெற்று வரும் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்படக் கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார்.

ஜி.வியின் சூப்பர்வுமென் அன்வி… வைரலாகும் ”ஸோ ஸ்வீட்” புகைப்படங்கள்!

“இனி எந்தன் கைபேசி அழகாகிறது” என்று கூறும் ரசிகர்கள் புகைப்படத்தை தரவிறக்கம் செய்து தங்கள் ஸ்மார்ட் போன்களின் வால்பேப்பராக வைத்துள்ளனர்.

‘உங்கள் மீதான காதல் வளர்ந்து கொண்டே போகிறது’ ஜீ.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி நெகிழ்ச்சி

இசையமைப்பாளர் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவி தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு ரொமாண்டிக் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததால் அந்தப்படம் வைரலாகி…

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு : ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. வீடியோ வெளியீடு!

போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம், தடுப்போம். இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம் – இசைப்புயல்

ஜி.வி.பிரகாஷ் படத்தை இயக்கியவர்: முதல் படமே வெளியாகாத நிலையில் இளம் இயக்குநர் மரணம்

அன்னூரை சேர்ந்த வெங்கட் இயக்குனராக வேண்டும் என்ற, லட்சியத்துடன் கடினமாக உழைத்தவர்.

100 kadhal movie in tamilrockers :ஜி.வி பிரகாஷை கடுப்பேற்றும் தமிழ்ராக்கர்ஸ்… ஒரு படத்தையும் விட்டு வைக்கிறது இல்லை!

100 kadhal full Full Movie In TamilRockers : சில நடிகர்கள் வருடத்திற்கு 7,8 படங்களை கூட ரிலீஸ் செய்கின்றனர்.

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜி.வி.பிரகாஷ்! – அவரே வெளியிட்ட வீடியோ!

G.V.Prakash Kumar: இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டாண்டப் காமெடி நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்

Sivappu Manjal Pachai In TamilRockers: சித்தார்த்- ஜி.வி.பிரகாஷ் கோரிக்கையை கேளுங்க ரசிகர்களே!

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.

தனுஷின் ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃபோக் சாங்!

Asuran Movie: தந்தை இரண்டு மகன்கள் என மொத்தம் 3 கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசை, நடிப்பு, சமூகப்பணி அடுத்து என்ன? ஜி.வி.பிரகாஷின் திடீர் திட்டம்!

இசை, நடிப்பு என பிஸியாக வலம் வந்தாலும் மற்றொரு புறம் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் ஜி.வி. 

வைரல் வீடியோ : 7 வயதில் ஜிவி பிரகாஷ் இது மாதிரிதான் பாடினார்!

தமிழ்நாட்டில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ், 7 வயதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாடிய பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பிரபலமான…

தனுஷ் ஹீரோயினுடன் ஜோடிபோட்ட ஜீ.வி.பிரகாஷ்

தனுஷுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘நாச்சியார்’ படத்தின் ஸ்டில்ஸ்

‘நாச்சியார்’ படம் ஏறக்குறைய 100 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தான் படத்தின் ரன்னிங் டைம்.

பாலா படமா இப்படி? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ‘நாச்சியார்’

இதுவரை பாலா படங்களிலேயே இல்லாத அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் ஒன்று ‘நாச்சியார்’ படத்தில் உள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் கொண்டாடிய ‘100% காதல்’ படக்குழு – புகைப்படங்கள்

எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துவரும் படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

GV Prakash Videos

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘நாச்சியார்’ படத்தின் டிரெய்லர்

ஏற்கெனவே ரிலீஸான டீஸரின் இறுதியில், ஜோதிகா கெட்டவார்த்தை பேசுவார். அதற்கு பல இடங்களி எதிர்ப்பு எழுந்தது.

Watch Video
Exit mobile version