எல் முருகன்(L Murugan), வழக்கறிஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். 1977 ஆம் ஆண்டு, மே 29 அன்று தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியில் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல் முருகன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவர் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்.
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தைப் பெற்றார். 2014 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக ஆனார். மேலும் 2017 முதல் 2019 வரை இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
தொடர்ந்து, எல். முருகண் மார்ச் 11, 2020 அன்று தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் போட்டியிட்டு திமுகவின் என். கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஜூலை 7 2021 அன்று மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். சுதந்திரத்துக்குப் பிறகு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முதல் இந்திய அமைச்சரவை உறுப்பினர். இவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்Read More
நிதி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியும் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையைஅவர் உணர்வார் என நம்புகிறேன் என…
இளையராஜா பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்து பற்றி திமுகவினர் யாரும் கருத்து கூறவில்லை. அதனால், மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு…
உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் திருக்குறளை பிரதமர் முன்னிலைப்படுத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தலித்துகளையும் பழங்குடியினரையும் அமைச்சரவையில் அல்லது அதிகாரத்தில் சேர்த்தார்களா? சமூக நீதியின் உண்மையான உணர்வை யார் காட்டினார்கள் என்று அவர் கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் எல்.முருகன் “சமூக…
பாஜக பட்டியல் சமூகத்தில் இருந்து குறிப்பாக அருந்ததியர் சமூகத்தில் இருந்து எல்.முருகனை மத்திய அமைச்சராக்கி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட…
தமிழகத்தின் இரு பெரும் துருவத் தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் நட்சத்திர வேட்பாளர்களும் விஐபி வேட்பாளர்களும் அதிக…
தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தனி தொகுதியில் மலரச் செய்வாரா? அல்லது திமுக தாராபுரம்…
பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளை மூலவர் தரிசனத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார்…
பாஜக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அரை மணி நேரம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் அரைமணி நேரம்…
திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி பாஜக தொடங்க உள்ளதாக அறிவித்த வேல் யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று…
தமிழக பாஜக வெற்றிவேல் யாத்திரைக்காக வெளியிட்டுள்ள “வாராரு வாராரு முருகவேல் கொண்டு” என்ற பிரசாரப் பாடல் வீடியோ, பாஜக எம்.ஜி.ஆரை சொந்தமாக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை…
பாஜக தலைவர் எல்.முருகன், மு.க.ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்ததற்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை மட்டும் வாசகர்களுக்கு தொகுத்து…