ரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளளை சந்தித்தனர். அவர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.