பின்னணி பாடகி சிவாங்கி கிருஷ்ணகுமார்(Sivangi Krishnakumar), 25 மே 2000இல் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழிலதிபரும், இசைக் கலைஞருமாவார். இவரது தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணிப் பாடகியாவாவார். சிவாங்கியின் பெற்றோர் இருவரும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்கள். இவரது சகோதரர் பெயர் வினயக் சுந்தர்.
தற்போது குடும்பத்துடன் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வசித்துக் கொண்டு இருக்கிறார்.
சிவாங்கி தனது பள்ளிப் படிப்பை சின்மய வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முடித்தார். பின் எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். இவரது கல்லூரி நாட்களில் இசைத் துறையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் தனது கல்லுாரி நாட்களிலேயே இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தினார்.
சிவாங்கி முதன்முதலாக, பசங்க திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த ‘அன்பாலே அழகாகும்’ பாடலை பாடினார். அதன்பின், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சிங்கர்7 நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பெற்றார்.
தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “குக்க வித் கோமாளி” என்னும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி பங்கேற்ற சிவாங்கிக்கு, ரசிகர் பட்டாளம் உருவானது. அவருக்கு, 2021ஆம் ஆண்டு பிளாக் ஷீப் டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருதும், பிஹைண்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருதும், விஜய் தொலைக்காட்சி விருதுகளும் கிடைத்தன.
பல திரைப்படங்களின் பாடலை பாடும் சிவாங்கி, 2022இல் வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து நடிகையாகவும் வளம் வர தொடங்கியுள்ளனர்.
இதுதவிர, யூடியூப் சேனல் வைத்திருக்கும் சிவாங்கி, அவ்வப்போது வீடியோஸ் பதிவிட்டு வருகிறார்.Read More
குக்கு வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அஸ்வின், புகழ், பவித்ரா எல்லோரும் ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒன்றாக சந்தித்துக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம்…
விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழாவில், ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினர் அதிக விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர்.…
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பங்கேற்காததால் வருத்தம் அடைந்த புகழ் பாசத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட அதற்கு மணிமேகலை, மிஸ் யூ டா சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கும் புகழ் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டாப் 5 பிரபலங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் அவரது புகழ் கொடி பறக்கிறது.
Cook With Comali : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகி வரும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்ற புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் வெளியிட்டுள்ள…