தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan), கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஜூன் 2, 1961 ஆம் ஆண்டு பிரபல காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார். சவுந்தரராஜன் ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
சுமார் 5 ஆண்டுக்கால பேராசிரியர் வாழ்க்கைக்கு பிறகு, பா.ஜ.காவில் இணைந்து முழு நேர அரசியல் பணியில் ஈடுபட தொடங்கினார்.
1999ல் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளரான தமிழிசை, 2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளராகவும், 2005ல் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர், 2007ல் மாநில பொதுச்செயலாளர், 2010ல் மாநில துணைத்தலைவர், 2013ல் பா.ஜ.க தேசிய செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழக பாஜகவின் முதல் பெண் தலைவராவார்.
2006 &2011 தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009,2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழசை தோல்வியடைந்தார்.
2014இல் தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். கட்சிக்காக தீவிரமாக உழைத்த தமிழிசை, செப்டம்பர் 01, 2019 அன்று தெலங்கானா மாநிலத்தின், ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் தமிழிசையை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.Read More
தெலுங்கானா குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை…
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பொங்கல் விழா கொண்டாடினார் ரெண்டு மணி நேரம் இந்த விழாவிற்கு முதலமைச்சர் தாமதமாக வந்து விழாவில் கலந்து கொண்டார்.
தி.மு.க அரசு மற்றும் கருணாநிதி குடும்பத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தி.மு.க-வின் முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், தெலங்கானா பண்ணை வீடு…
மத்தியப் பிரதேசத்தில் 13 மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறு இயல், உடல் இயல், உயிர் வேதியியல் உள்ளிட்ட மூன்று இளநிலை மருத்துவ பாடங்கள் இந்தியில்…
தமிழ்த் தாய் வாழ்த்து பாடாததில் உள்நோக்கம் இல்லை; எனது தந்தை தமிழக அரசிடம் வீடு வாங்கியது எனக்கு தகவலாகத்தான் தெரிந்தது, அதிர்ச்சி அடைந்தேன் – தெலுங்கானா ஆளுநர்…
ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல, முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு எடுக்கப்படும் அமைச்சரவை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது – தெலுங்கானா தமிழிசை சௌந்தரராஜன்
அந்தந்த மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் நலத் திட்டங்களில் தலையிட முயன்றால், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட நிலைதான் மற்ற மாநில ஆளுநர்களுக்கும் ஏற்படும் என்று திமுகவின் முரசொலி…