Tamilisai Soundararajan

தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan), கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஜூன் 2, 1961 ஆம் ஆண்டு பிரபல காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார். சவுந்தரராஜன் ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

சுமார் 5 ஆண்டுக்கால பேராசிரியர் வாழ்க்கைக்கு பிறகு, பா.ஜ.காவில் இணைந்து முழு நேர அரசியல் பணியில் ஈடுபட தொடங்கினார்.

1999ல் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளரான தமிழிசை, 2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளராகவும், 2005ல் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர், 2007ல் மாநில பொதுச்செயலாளர், 2010ல் மாநில துணைத்தலைவர், 2013ல் பா.ஜ.க தேசிய செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழக பாஜகவின் முதல் பெண் தலைவராவார்.

2006 &2011 தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009,2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழசை தோல்வியடைந்தார்.

2014இல் தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். கட்சிக்காக தீவிரமாக உழைத்த தமிழிசை, செப்டம்பர் 01, 2019 அன்று தெலங்கானா மாநிலத்தின், ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் தமிழிசையை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
Read More

Tamilisai Soundararajan News

Puducherry railway meeting
சென்னை – மகாபலிபுரம் – கடலூர் ரயில் வழித்தடம்; பணிகளை விரைவுபடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியை இணைக்கும் சென்னை- மகாபலிபுரம்- கடலூர் வழித்தடத்திலான ரயில் சேவைத் திட்டம்; பணிகளை விரைவுபடுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி மருத்துவ கல்வி அரசு இடஒதுக்கீடு: ‘நியாயமான முடிவு தேவை’ – அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

மருத்துவரான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவ கல்வி அரசு இடஒதுக்கீடு விவகாரத்தில் நியாமான முடிவை எடுக்க ஏன் தயங்குகிறார் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி…

ராமாயாணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது; கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

ராமாயாணம், மகாபாரதம் துன்பத்தை தாங்க சொல்லிக் கொடுத்துள்ளது என தெலஙகானா, புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பூஜைக்கு நேர அனுமதி பிற்போக்கு; மாதவிடாய்க்கு விடுமுறை விடுங்கள்: புதுவை மாதர் சங்கம் முழக்கம்

புதுச்சேரியில் பெண் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய காலதாமத அனுமதி; இந்த வேலை நேர சலுகை அறிவிப்பு, பெண்களை ஏமாற்றும் அரசியல் கபட நாடகம் என சி.பி.எம்…

12 மணிநேர வேலை: தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்றங்களை செய்ய வேண்டும் – தமிழிசை

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும். 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு விட…

ஸ்டாலினுக்கு தமிழிசை ஆதரவு அளிப்பது ஏன்? புதுச்சேரி அ.தி.மு.க கேள்வி

பலருடைய உயிர் தியாகங்களுக்கு பிறகு கிடைத்த 8 மணி நேர வேலை உரிமையை நம்முடைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பறிக்க முற்படுவதாக தெரிகிறது; புதுச்சேரி அ.தி.மு.க

12 மணி நேர வேலைக்கு ஆதரவு: கவர்னர் தமிழிசைக்கு புதுவை அ.தி.மு.க கடும் கண்டனம்

தமிழகத்தில் தி.மு.க முதல அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் விரோத இந்த சட்ட மசோதாவிற்கு புதுவை கவர்னர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று புதுவை மாநில…

விரதம் மேற்கொள்வது இறை நெறிக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் உகந்தது – தமிழிசை

சகோதரத்துவத்தோடு நாம் அனைவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

விஜய் டி.வி ஆங்கராக தமிழிசை: என்ன நிகழ்ச்சினு பாருங்க!

விஜய் டிவியில் தொடங்கப்பட உள்ள புதிய நிகழ்ச்சியின் புரோமோவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுக உரை பேசிய நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அந்த…

புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு பல்கலை.; ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது

தெலங்கானா ஆளுனரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்.. உச்ச நீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு

தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

‘தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது’: ஆளுநர் தமிழிசை பேச்சு

“நீங்கள் வேண்டுமென்றாலும் சரி, வேண்டாம் என்றாலும் சரி தமிழ்நாட்டிற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது.” என்று ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு ரங்கசாமி அழைப்பு

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைக்க வேண்டி, முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

தமிழர்கள் எங்கள் திறமையை அடையாளம் காணவில்லை; மத்திய அரசு ஆளுநர் ஆக்கியுள்ளது; தமிழிசை சௌந்தரராஜன்

வட மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற யார் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் – கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

சென்னை- புதுச்சேரி- கடலூர் புதிய ரயில் பாதை திட்டம்; துணை நிலை ஆளுநர் தமிழிசை வரவேற்பு

சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு புதுவை துணைநிலை…

சமுதாய பங்களிப்பு திட்டம்: பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் புதுவை ஆளுனருடன் ஆலோசனை

சமுதாய பங்களிப்பு திட்டச் செயல்பாடுகள் தொடர்பாக புதுச்சேரி ஆளுனருடன் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கால தாமதமாக தேசியக் கொடியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழிசை

தெலுங்கானா குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version